மைக்ரோவேவ் சேமியா பாயாசம்
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
பால் - 2 கப்
சேமியா - 1/2 கப்
சர்க்கரை - 1/2 கப்
ஏலக்காய் - 2
முந்திரி - 5
உலர்ந்த திராட்சை - 5
நெய் - 1 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் சேமியாவை 1 கப் தண்ணீருடன் 1/2 தேக்கரண்டி நெய் சேர்த்து 5 நிமிடம் மைக்ரோவேவியில் நன்றாக வேகவைத்து கொள்ளவும்.
பின்பு வேறு ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் மீதி நெய் ஊற்றி முந்திரி மற்றும் திராட்சையை 1 நிமிடம் மைக்ரோவேவில் வைத்து வறுத்து கொள்ளவும்.
அதே பாத்திரத்தில் பாலினை ஊற்றி 3 - 4 நிமிடம் வைக்கவும்.
பின்பு வேகவைத்த சேமியா, ஏலக்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து 1 நிமிடம் வைக்கவும்.