மைக்ரோவேவ் சேமியா கேசரி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சேமியா - 100 கிராம்

சீனி - 50 கிராம்

நெய் - 2 தேக்கரண்டி

ஆரஞ்சு சிகப்பு - ஒரு சிட்டிகை

தண்ணீர் - 1 கப்

உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு சேமியாவும் தண்ணீரும் சேர்த்து மூடி மைக்ரோவேவ் அவனில் வைத்து 5 நிமிடங்கள் ஹையில் குக் செய்யவும்.

பின்பு பாத்திரத்தை திறந்து சீனி, ஆரஞ்சு சிகப்பு நிறம், உப்பு சேர்த்து மூடி அவனில் வைத்து 3 நிமிடங்கள் ஹையில் வைக்கவும்.

பிறகு 2 நிமிடங்கள் திறந்து வைக்கவும்.

பின்பு 3 நிமிடங்கள் ஹையில் வைக்கவும். அதன் பின்பு அதை இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: