முளைக்கட்டிய பச்சபயறு அல்வா
0
தேவையான பொருட்கள்:
முளைக்கட்டிய பச்சபயறு - 1/2 கப்
வெல்லம் அல்லது சர்க்கரை - தேவைக்கேற்ப
வாழைப்பழம் - 1
ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
நெய் - தேவைக்கேற்ப
கடலைமாவு - 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
முந்திரித்தூள் - 5 தேக்கரண்டி
முந்திரி, பாதாம் - சிறிது
செய்முறை:
வேக வைத்த பயறை நன்கு மிக்ஸியில் மசித்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மசித்த பயறு, வெல்லம்(ஊற வைத்து கரைத்து வடிகட்டியது) அல்லது சர்க்கரை, வாழைப்பழம், ஏலக்காய் தூள், நெய், கடலைமாவு, தேங்காய் துருவல், முந்திரி தூள் சேர்த்து நன்கு பிசையவும்.
நாண் ஸ்டிக் கடாயில் நெய் விட்டு மசித்தவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
சுருண்டு வந்ததும் முந்திரி, பாதாம் சேர்த்து ஆறியவுடன் எடுத்து பரிமாறவும்.