முப்பருப்பு கேக்

on on on on off 2 - Great!
4 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மைதாமாவு - 1 கப்

பாதாம் பருப்பு - 1/4 கப்

முந்தரிபருப்பு - 1/2 கப்

நிலக்கடலை - 1/4 கப்

காய்ச்சி ஆறவைத்த பால் - 1/4 கப்

நெய் - 1கப்

சர்க்கரை - 3 1/2 கப்

உலர்ந்த திராட்சை - 100கிராம்

கேசரி பவுடர் - 2 சிட்டிகை

ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி

பச்சை கற்பூரம் - சிறிதளவு

செய்முறை:

பாதாம் பருப்பை வெந்நீரில் போட்டு 1 மணிநேரம் ஊற வைத்து தோல் உரித்துக் கொள்ளவும்.

முந்திரி , நிலக்கடலை வெது வெதுப்பான நீரில் போட்டு மிக்சியில் பால் சேர்த்து சட்னி பதத்தில் நைசாக அரைக்கவும்.

மைதா மாவை கால் கோப்பை நெய் விட்டு பொன் நிறமாக வறுக்கவும்.

கனமான வாணலியில் ஒரு கப் தண்ணீர் விட்டு அதில் சர்க்கரையை போட்டு அதில் ஒரு ஸ்பூன் பாலை விடவும். மேலே படரும் அழுக்கை எடுத்து விட பால் உதவும்.

பாகு காய்ந்து கம்பி பதம் வரும் போது அரைத்த விழுதை சேர்க்கவும்.

அதனுடன் ஏலத்தூள்,கேசரிப்பவுடர்,பச்சைக்கற்பூரம் வறுத்த மைதா சேர்த்து நெய்யை சிறிதாக சிறிதாக விட்டு கிளறவும்.

சுருள வரும் போது நெய் தடவிய தட்டில் ஊற்றி நெய்யில் பொன்னிறமாக வருத்த உலர்ந்த திராட்சையை மேலாக பரப்பி ஆறியதும் இஷ்டமான வடிவில் வெட்டி பரிமாறவும்.

குறிப்புகள்: