முந்திரி ஸ்வீட்
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
முந்திரி - ஒரு டம்ளர் குவித்து அளந்தது
சர்க்கரை - அதே டம்ளரில் ஒரு டம்ளர்
ரோஸ் எசன்ஸ் - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
முந்திரியை நைசாக பொடித்து சர்க்கரையுடன் கலக்கவும்.
பிறகு அடுப்பில் வைத்து சில துளிகள் தண்ணீர் தெளித்து கலவை கெட்டிபடும் வரை கிளறவும்.
கையில் உருட்டி பார்த்தால் உருள வேண்டும்.
இந்த பதம் வந்தவுடன் இறக்கி எசன்ஸ் சேர்த்து ஆறும் வரை கிளறவும். காய், பழம் போல் விரும்பிய வடிவத்தில் செய்யலாம்.