முந்திரி சாக்லேட் டெஸர்ட்
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
வெண்ணெய் - 100 கிராம்
சர்க்கரை - 100 கிராம்
குளுக்கோஸ் பிஸ்கட் - 100 கிராம்
முந்திரி - 25 கிராம்
கோகோ பவுடர் - 3 தேக்கரண்டி
ஸ்வீட் ஜரிகை பேப்பர் - 1
செர்ரி - சிறிதளவு
திராட்சை - சிறிதளவு
செய்முறை:
முந்திரிகளை உடைத்து பவுடராக்கவும். பிஸ்கட்டையும் உடைத்து பவுடராக்கிக் கொள்ளவும்.
வெண்ணெயை நன்கு கடைந்து கிரீம்போல் ஆக்கி அதில் பவுடராக்கிய சர்க்கரையைச் சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு கலக்கவும்.
கோகோ பவுடரையும் சேர்த்து நன்கு கரண்டியால் அடிக்கவும். அடுத்து முந்திரி பவுடரையும், பிஸ்கட் பவுடரையும் சேர்க்கவும்.
ஒரு சதுர கிண்ணத்தில் நெய் தடவி ஜரிகைப் பேப்பரைப் போட்டு கலவையை அதில் கொட்டி சமப்படுத்தி செர்ரி, திராட்சைப் பழங்களை அதன் மேல் வைக்கவும்.
பின் இதை 3 மணிநேரம் பிரிட்ஜில் வைத்து எடுக்கவும்.