முந்திரி கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முந்திரி - 1 கப்

சீனி - 1 கப்

நெய் - 3/4 கப்

குங்குமப்பூ ( விரும்பினால்) - ஒரு சிட்டிகை

செய்முறை:

முந்திரியை 5 மணி நேரம் ஊற வைத்து விழுதாக அரைக்கவும். அரைத்த விழுதின் அளவிற்கு சீனி தேவை.

ஒரு கடாயில் அரைத்த முந்திரி விழுது, சீனி சேர்த்து நன்றாக கலக்கவும், பின் அந்த கடாயை அடுப்பிலேற்றி மிதமான தீயில் வைத்து கிளறவும். குங்குமப்பூ சேர்த்து சிறிது சிறிதாக நெய்யை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.

கலவை கெட்டியாக வரும் போது அடுப்பிலிருந்து இறக்கி வைத்து கிளறிக் கொண்டே இருந்தால் கலவை நன்றாக இருக்கும். அந்த சமயத்தில் நெய் தடவிய ட்ரேயில் ஊற்றி ஆறியதும் விரும்பிய வடிவத்தில் வில்லைகள் போடவும்.

குறிப்புகள்:

மிகவும் கவனமாக செய்யவும். பதம் தான் இதற்கு முக்கியம்.