முந்திரி அல்வா
0
தேவையான பொருட்கள்:
முந்திரிப் பருப்பு - 1 கப்
சர்க்கரை - 1 கப்
நெய் - 1 கப்
பொடி செய்த ஏலக்காய் - 5
செய்முறை:
முந்திரிப் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறிய முந்திரியை நைசாக அரைத்துக் கொள்ளவும்.
சூடான கடாயில் சர்க்கரையைப் போட்டு மிகச் சிறிதளவு தண்ணீர் ஊற்றி இளம் பாகு பதத்தில் காய்ச்சவும்.
இதில் அரைத்த முந்திரியை சேர்த்து, நெய் விட்டு கிளறவும்.
ஏலக்காய் தூளையும் போட்டு கிளறி அல்வா இறுகி வரும் போது இறக்கி பரிமாறவும்.