முக்கனி பர்பி
தேவையான பொருட்கள்:
தோல் நீக்கி கொரகொரப்பாக பொடித்த வேர்கடலை - 1 கப்.
எள்ளு வறுத்து சுத்தப்படுத்தி கொரகொரப்பாக பொடித்தது - 1 கப்
தேங்காய் துருவல் - 1 கப்
வெல்லம் தூளாக்கியது - 1 கப்
ஏலக்காய் பொடி - 1/2 டி தேக்கரண்டி
செய்முறை:
அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து முக்கால் கப் நீர் ஊற்றவும்.
அதில் பொடித்த வெல்லத்தை சேர்க்கவும்
நன்கு கொதித்து வரும் போது, வேரு ஒரு பாத்திரத்தில் மெல்லிய துணியை வைத்து வெல்லத்தில் வரும் மண்ணை வடிகட்டவும்.
வடிகட்டிய வெல்லத்தை மறுபடியும் அடி கனமான பாத்திரத்தில் வூற்றி அடுப்பில் கொதிக்க வைக்கவும்.
நன்கு கொதித்து ஒரு கம்பி பாகு பதம் வரும் வரை கொதிக்க விடவும்.
பிறகு அதில் பொடித்து வைத்துள்ள வேர்க்கடலை, எள்ளு, தேங்காய் பொடிகளை கலந்து இறக்கிவிடவும்.
நெய் தடவிய தட்டில் இந்த கலவையை கொட்டி சமமாக பரப்பவும்.
சிறிது ஆறியவுடன் கத்தியில் கோடு போட்டு சிறிய துண்டுகள் போட்டு பரிமாறவும்.