மில்க் மெய்டு பாயசம்
0
தேவையான பொருட்கள்:
பொடி சேமியா - 1 கப்
ரவை - 2 தேக்கரண்டி
மில்க் மெய்டு - 1/2 டின்
நெய் - 1 தேக்கரண்டி+ 1 தேக்கரண்டி
முந்திரி - 6
உளர் திராச்சை - சிறிது
ஏலக்காய் - 3
கிராம்பு - 2
உப்பு - 1 சிட்டிகை
செய்முறை:
ஒரு வாணலியில் 1ஸ்பூன் நெய் ஊற்றி சேமியாவை பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
வறுத்த சேமியாவை ஒரு தட்டில் கொட்டிவிடவும்.
அதே பாத்திரத்தில் 1ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரி,திராச்சை,ஏலக்காய்,கிராம்பு போட்டு தாளிக்கவும்.
அதில் தேவையானஅளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து அதில் சேமியாவைக் கொட்டி வேகவிடவும்.
சேமியா வெந்ததும் ரவை சேர்த்து கிண்டவும்.
ரவையும் வெந்தபின் மில்க் மிய்டு சேர்க்கவும்.அவரவர் இனிப்புக்கு தகுந்தாற் போல் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ மில்க் மெய்டு சேக்கலாம்.
ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.