மில்க் புட்டிங்

on on on off off 2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மில்க் மெய்ட் - 1 டின்

பசும்பால் - 1 1/2 டின்

முட்டை - 5

சீனி - 15 கரண்டி

வெனிலா எசன்ஸ் - 3 துளி

கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை

குங்குமப்பூ - ஒரு சிட்டிகை

செய்முறை:

தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

முட்டையுடன் டின் பாலை ஊற்றி சேர்த்து கலக்கவும்.

பின்னர் காய்ச்சிய பால் சேர்த்து நன்கு கலக்கவும். அதனுடன் எசன்ஸ் கலர் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலக்கவும்

ஒரு அகலமான தட்டில் சீனியை போட்டு அடுப்பை பற்ற வைத்து தட்டை சுற்றிலும் காட்டினால் சீனி உருகி கேரமல் ஆகும் உடனே அடுப்பை நிறுத்தவும்.

தட்டில் எல்லா பக்கத்திலும் கேரமலை பரவவிட்டு முட்டை கலவையை அதில் ஊற்றவும்.

ஒரு வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் அரை பாகம் தண்ணீர் ஊற்றி அதில் தட்டை வைக்கவும்.

அதை மூடி போட்டு வேக விடவும்.

20 நிமிடம் கழித்து பார்த்தால் மேலே வெந்து உப்பியது போல் வரும் அதில் குங்குமப்பூவை மேலே தூவவும்.

ஆறியதும் துண்டுகள் போட்டு கேரமல் மேல் பக்கமாக இருப்பது போல் வைத்து தட்டில் அலங்கரித்தால் நன்றாக இருக்கும்.

குறிப்புகள்: