மில்க் சாக்லேட் (1)
0
தேவையான பொருட்கள்:
மில்க் பவுடர் - 2 கப் (கோபுரமாக குவித்து)
சர்க்கரை - 2 கப் (தலை தட்டி)
வெண்ணெய் - 50 கிராம்
தண்ணீர் - 1/2 கப்
கோகோ பவுடர் - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
மில்க் பவுடரையும், கோகோவையும் ஒன்றாகச் சலித்து வைக்கவும். சர்க்கரையையும் தண்ணீரையும் ஒரு கனமான பாத்திரத்தில் கலந்து அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும்.
கெட்டிக் கம்பிப் பதம் வர வேண்டும். (ஒரு சொட்டு எடுத்துச் சிறிது தண்ணீரில் விட்டால் உடனே உருட்டும் பதம் வர வேண்டும்). உடனே வெண்ணெயை சேர்த்துக் கீழே இறக்கி விடவும்.
சலித்த பொருட்களைக் கொட்டிக் கை விடாமல் கிளறவும். சப்பாத்தி மாவு பதம் வந்ததும், நெய் தடவிய தட்டில் கொட்டித் துண்டு போடவும்.