மிக்ஸட் பர்பி

on on on on off 1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பொட்டுக்கடலை - 50 கிராம்

நிலக்கடலை - 100 கிராம்

பாதாம் பருப்பு - 25 கிராம்

முந்தரி பருப்பு - 25 கிராம்

பிஸ்தா - 10 கிராம்

அக்ரூட் - 5

அத்திப்பழம் - 7

வெல்லம் - 1/4 கிலோ

நெய் - 2 தேக்கரண்டி

செய்முறை:

பொட்டுக்கடலை , நிலக்கடலை இரண்டையும் தனித்தனியே பச்சை வாசனை போகும் வரை வறுக்கவும்.

வறுத்த நிலக்கடலையின் தோல் நீக்கி சிறிது நெய் விட்டு பொட்டுக்கடலையையும் சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும்.

பிறகு இரண்டையும் ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்.

முந்திரிப்பருப்பை சிறிது நெய்யில் வறுத்து பொடியாக உடைத்துக் கொள்ளவும்.

பாதாம்,பிஸ்தா,அத்திப்பழம் ஆகியவற்றை 5/6 துண்டங்களாக கத்தியால் வெட்டிக் கொள்ளவும்.

எல்லா பருப்புகளையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.

வெல்லத்தில் தேவையான நீர் விட்டு பாகு காய்ச்சி கலந்து வைத்துள்ள பருப்புகளைக் கொட்டி நன்றாக கிளறி நெய் தடவிய தட்டில் கொட்டி பரத்தவும்.

அக்ரூட் பருப்புகளை உடைத்து பர்பி மேல் தூவி விருப்பமான வடிவைத்தில் வெட்டிக் பரிமாறவும்.

குறிப்புகள்: