மாம்பழ கேசரி
தேவையான பொருட்கள்:
பழுத்த மாம்பழம் - 1
ரவை - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
பால் - 3/4 கப்
தண்ணீர் - 3/4 கப்
நெய் - 4 முதல் 5 மேசைக்கரண்டி
முந்திரி - அலங்கரிக்க
ஏலக்காய் - 3
செய்முறை:
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். மாம்பழத்தை தோலை நீக்கிவிட்டு பழத்துண்டுகளை நறுக்கி ஒரு மிக்ஸியில் போட்டு, சிறிது நீர்விட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் ஒரு மேசைக்கரண்டி நெய்யை விட்டு ரவையை கொட்டி இளஞ்சூட்டில் லேசாக வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் + மாம்பழக்கூழ் + பால் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து (2 கப் அளவிற்கு குறையாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்) அடுப்பில் வைத்து கலந்துவிட்டு சூடாக்கவும்.
கலவை கூழாகி வரும் போது, சர்க்கரையையும் கொட்டி கரைய விடவும். எல்லாமுமாக சேர்ந்து கொதி வரும் நிலையில், வறுத்து வைத்த ரவையை கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி கிளறி விடவும்.
இரண்டு மேசைக்கரண்டி நெய்யையும் கூடவிட்டு, ரவைக்கலவை வேகும் வரை அவ்வப்போது கிளறிவிடவும். ஏலக்காயை பொடித்து சேர்க்கவும்.
எல்லாம் வெந்து பாத்திரத்தில் இருந்து ஒட்டாமல் விலகி வரும்போது, முந்திரியை நெய்யில் வறுத்து இதில் சேர்க்கவும். மேலும் ஒரு மேசைக்கரண்டி நெய்விட்டு கலந்துவிட்டு இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
மாம்பழத்திற்கு பதில் கடைகளில் கிடைக்கும் ரெடிமேட் மாம்பழக்கூழ் (mango pulp) டின் வாங்கி, அதில் அரை கப் அளவு எடுத்து உபயோகிக்கலாம். இங்கே மாம்பழத்தின் ஒரிஜினல் நிறத்தில் கேசரி செய்யப்பட்டுள்ளது. விருப்பப்பட்டால், (மேலும் நிறம்கூட்ட) ஒரு பின்ச் கேசரிக்கலர் சேர்க்கலாம்.