மாம்பழப் பாயசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கனிந்த மாம்பழம் - 2

பால் - 250 மில்லி

சர்க்கரை - 200 கிராம்

ஏலக்காய்ப் பொடி - 1/2 தேக்கரண்டி

முந்திரிப் பருப்பு - 10 கிராம்

உலர்ந்த திராட்சை - 10 கிராம்

குங்குமப் பூ - சிறிதளவு

செய்முறை:

மாம்பழங்களில் தோல், கொட்டை, நீக்கி துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து மாம்பழவிழுது, சர்க்கரை, அரை கப் தண்ணீர் சேர்த்து கிளறவும்.

பிறகு மாம்பழவிழுது கெட்டியானதும் அதனுடன் ஏலக்காய்ப் பொடி, நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு, திராட்சை, குங்குமப் பூ சேர்த்து கிளறவும்.

இறுதியில் காய்ச்சிய பாலை சேர்த்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: