மரவள்ளிக் கிழங்கு அல்வா





தேவையான பொருட்கள்:
மரவள்ளிக் கிழங்கு - 1/2 கிலோ
பால் - 1/2 லிட்டர்
நெய் - 100 கிராம்
வெண்ணெய் - 50 கிராம்
சர்க்கரை - 2 3/4 கப்
கசகசா - 50 கிராம்
முந்திரி - 50 கிராம்
திராட்சை - 50 கிராம்
வெள்ளரிவிதை - 50 கிராம்
ஏலக்காய் பொடி - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
மரவள்ளிக்கிழங்கை தோல் சீவி விட்டு பூ போன்று தூளாக சீவிக்கொள்ளவும்.
பிறகு வாணலியில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சி அதனுடன் கோவா சர்க்கரையைச் சேர்த்துக் கிளறி விடவும்.
பால் நன்கு சுண்டி திரட்டுப் பால் போல சேர்த்து வரும் போது ஏலக்காய்ப் பொடி சேர்க்கவும்.
பிறகு நெய் விட்டு கலக்கவும். அடுத்து துருவிய கிழங்கை அதில் கொட்டி கிளறி விடவும்.
சிறிது நேரம் அடுப்புத் தீயை சிறியதாக்கிக் கொள்ளவும். பிறகு அதனுடன் வறுத்த முந்திரி திராட்சையைப் போட்டு கலக்கவும்.
பிறகு ஒரு தாம்பாளத் தட்டில் வெண்ணெய் தடவி அதில் இந்தக் கலவையைக் கொட்டி அதன் மீது கசகசா தூவி வெள்ளரி விதையைத் தூவி காற்றில் வைக்கவும். சிறிது நேரத்தில் அல்வா தயாராகிவிடும்.