மரவள்ளிக்கிழங்கு பர்பி

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மரவள்ளிக்கிழங்கு - 1/4 கிலோ

சர்க்கரை - 300 கிராம்

நெய் - 100 கிராம்

முந்திரி - 10

ஏலக்காய் - 4

செய்முறை:

மரவள்ளிக் கிழங்கை துருவி வைக்கவும். சிறிது நெய்யை ஊற்றி மரவள்ளிக் கிழங்கு துருவலை வதக்கி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு, பாகு காய்ச்சவும்.

கம்பி பதம் வந்தவுடன் துருவலை கொட்டி கிளறவும்.நெய்யை சிறிது சிறிதாக விட்டு கிளறவும். முந்திரியை நெய்யில் வறுத்து போடவும்.

ஏலக்காயை பொடித்து போடவும். நன்கு பூத்து வரும் போது நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும்.

குறிப்புகள்: