மஞ்சள் பூசணி காய் அல்வா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உரித்த தேங்காய் அளவுள்ள - 1 பரங்கிக் காய்

கன்டன்ஸ்டு மில்க் - 1 டின்

பால் - 1 கப்

நெய் - 2 தேக்கரண்டி

முந்திரி - 10

உலர்ந்த திராக்ஷை - 20

ஏலப்பொடி - 1/2 தேக்கரண்டி

கிராம்பு - 4

செய்முறை:

முதலில் பரங்கிக் காயை தோல் சீவி துருவிக் கொள்ளவும்.

வாணலியில் நெய்யை விட்டு துருவிய பரங்கிக் காயை நன்கு வதக்கிக் கொள்ளவும்.

காய் நன்கு வதங்கியதும் அதில் கன்டன்ஸ்டு மில்க்கை சேர்த்து நன்கு கிளறவும்.

கலவை மிக கெட்டியாக இருந்தால் சிறிதளவு பால் சேர்த்துக் கொள்ளவும்.

மேற்படி கலவை நன்கு வெந்து அல்வா பதத்திற்கு வந்த உடன் ஏலம் மற்றும் கிராம்புப் பொடி சேர்த்து நன்கு கிளறி முந்திரி மற்றும் உலர்ந்த திராட்சையை நெய்யில் பொறித்து மேலே துவி சூடாகப் பரிமாறவும்.

குறிப்புகள்:

கன்டன்ஸ்டு மில்க்கிலேயே இனிப்பு இருப்பதால் தனியே சர்க்கரை சேர்க்க வேண்டியதில்லை.

தேவையானால் அவரவர் சுவைக்கேற்ப சர்க்கரையும் சேர்த்துக் கொள்ளலாம்