மஞ்சள் பூசணிக்காய் பாயாசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மஞ்சள் பூசணிக்காய் - 200 கிராம்

தேங்காய் - 1/2 மூடி

வெல்லப்பாகு - 150 கிராம்

ஏலத் தூள் - 2 பின்ச்

சுக்கு தூள் - 1 பின்ச்

நெய் - 4 தேக்கரண்டி

வறுத்த முந்திரி பருப்பு, வறுத்த தேங்காய் கொத்து - 1/2 கப்

செய்முறை:

முதலில் தேங்காயில் தண்ணீர் கொஞ்சம் சேர்த்து பாலெடுக்கவும் இது முதல் பால்..பிறகு தண்ணீர் சேர்த்து வடிகட்டி கிடைக்கும் நீர்த்த பால் இரண்டாம் பால்

நெய்யில் முந்திரி பருப்பையும் ,குட்டி குட்டி வில்லைகளாக நறுக்கின தேங்காயையும் வறுத்து எடுத்துக் கொள்ளவும்

இதன் பின் மஞ்சள் பூசணிக்காயை சதுரங்களாக நறுக்கி நெய் விட்டு ஒரு பரந்த கடாயில் வதக்கவும்

வதக்கி தண்ணீர் விட்டு பூசணிக்காய் நன்கு வெந்து உடைய தொடங்கியதும் ஒரு கரண்டியால் நன்கு மசித்து விடவும்

பின்பு நன்கு மசிந்து வெந்ததும் வெல்லப்பாகு தேவைக்கு சேர்த்து கொதிக்க விடவும்

பூசணிக்காயோடு பாகு கலந்து சற்று வற்றும்பொழுது இரண்டால் பால் சேர்த்து கொதிக்க விடவும்

அதுவும் சிறிது வற்றிய பின் முதலாம் பால் சேர்த்து திக்காக வற்றி வரும்பொழுது நெய்யில் வறுத்த முந்திரி பருப்பும், சுக்கு பொடி, ஏலப்பொடி, தேங்காய் கொத்தும் சேர்த்து இறக்கி பரிமாறவும்

குறிப்புகள்: