ப்ரெட் அல்வா (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ப்ரெட் துண்டு - 3

கோதுமை மாவு - 1/2 கப்

சர்க்கரை - 4 மேசைக்கரண்டி

நெய், முந்திரி, திராட்சை - தேவைக்கு

செய்முறை:

ப்ரெட் துண்டுகளை பொடியாக நறுக்கி நெய்யில் சிவக்க வறுத்து எடுக்கவும்.

முந்திரி திராட்சை நெய்யில் வறுத்து எடுக்கவும்.

கோதுமை மாவையும் நெய்யில் வறுத்து அதில் ப்ரெட் துண்டுகள் சேர்த்து நன்றாக கலக்கவும்.

இதில் சர்க்கரை சேர்த்து பிரட்டி, கொஞ்சம் சூடான நீர் சேர்த்து ப்ரெட் துண்டுகள் மாவுடன் கலந்து அல்வா பதம் வந்ததும் எடுக்கவும்.

கடைசியாக வறுத்த முந்திரி திராட்சை கலந்து விடவும்.

குறிப்புகள்: