ப்ரெட் அல்வா
0
தேவையான பொருட்கள்:
ப்ரெட் துண்டு - 2
கோதுமை மாவு - 4 தேக்கரண்டி
சர்க்கரை - 6 தேக்கரண்டி
நெய், முந்திரி, திராட்சை - தேவைக்கு
புட் கலர், ஏலக்காய் - தேவைக்கு
செய்முறை:
ப்ரெட்டை துண்டுகளாக்கி நெய்யில் நன்றாக சிவக்க வறுக்கவும். முந்திரி, திராட்சையும் வறுக்கவும்.
மேலும் சிறிது நெய் விட்டு கோதுமை மாவை வறுக்கவும்.
இதில் வறுத்த ப்ரெட் துண்டுகள் சேர்த்து பிரட்டவும்.
சர்க்கரையும் சேர்த்து பிரட்டவும்.
தண்ணீரை கொதிக்க வைத்து அதில் புட் கலர் சேர்த்து ப்ரெட் மாவு கலவையில் சிறிது சிறிதாக சேர்த்து கலந்து விடவும்.
ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து பிரட்டவும்.
குறிப்புகள்:
ப்ரெட் அதிகம் வேண்டாம் என்றால் மாவு இன்னும் கூடுதலாக சேர்க்கலாம்.
ப்ரெட் பீஸாக இருக்க வேண்டாம் முழுவதும் சேர்ந்து வர வேண்டும் என்றால் நீர் இன்னும் கூடுதலாக சேர்க்கலாம்.