போளி (2)

on on on off off 4 - Good!
3 நட்சத்திரங்கள் - 4 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 1 கப்

எண்ணைய் - 1/2 கப்

உப்பு - ருசிக்கேற்ப

பூரணத்திற்கு:

வேகவைத்து மசித்த கடலை பருப்பு - 1/2 கப்

பொடியாக அரிந்த வெல்லம் - 1/4 கப்

தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி

நசுக்கிய ஏலக்காய் - 4

எண்ணைய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

மைதா மாவை 1/2 கப் எண்ணைய் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து இரவே வைத்து விடவும்.

பூரணத்திற்கு கொடுத்த பொருட்களை போட்டு நன்கு இறுக்கமாக கெட்டியாக பிசையவும்.

மைதா மாவை சிறி உண்டையாக உருட்டி நடுவில் ஒரு பள்ளம் விட்டு மற்ற பகுதியை அப்படியே தட்டவும்.

குழியில் பூரணத்தை வைத்து எல்லா மாவையும் சேர்த்து ஒரு உருண்டையாக உருட்டி வைக்கவும்.

அந்த உருண்டையை கையாலேயே அப்படியே தட்டி சப்பாத்தி போல் பரத்தி வட்டமாக செய்யவும்.

தோசைக்கல்லில் இந்த வட்டத்தை போட்டு ஒரு ஸ்பூன் எண்ணைய் ஊற்றி திருப்பி போட்டு மீண்டும் ஒரு ஸ்பூன் எண்ணைய் ஊற்றி பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

குறிப்புகள்: