பொருள் விளங்கா உருண்டை (1)
தேவையான பொருட்கள்:
புழுங்கலரிசி - 1/2 கிலோ
பாசிப்பருப்பு - 1/4 கிலோ
வெல்லம் - 1/2 கிலோ
தேங்காய் - 1 மூடி,
ஏலக்காய் - 3
பொட்டுக்கடலை - 1 கைப்பிடி
வறுத்த நிலக்கடலை - 1 கைப்பிடி
முந்திரி - 10
உப்பு - 1 சிட்டிகை
நெய் - 1 தேக்கரண்டி
செய்முறை:
பாசிப்பருப்பை சிவக்க வறுக்கவும்.
அரிசியை சிறிது சிறிதாக வாணலியில் போட்டு, பொரி அரிசி போல் வறுத்தெடுக்கவும்.
வறுத்த அரிசியையும், பாசிப்பருப்பையும் சேர்த்து, மெஷினில் நைசாக அரைக்கவும்.
தேங்காயை பல்லு பல்லாக நறுக்கி வைக்கவும்.
1 ஸ்பூன் நெய்யில், ஒடித்த முந்திரி, தேங்காய், பொட்டுக்கடலை, நிலக்கடலை எல்லாவற்றையும் வறுத்து, மாவில் கொட்டவும்.
ஏலக்காய்தூள், உப்பு சேர்க்கவும்.
வெல்லத்தைத் தூள் செய்து, 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
வெல்லம் கரைந்ததும் வடிகட்டி, கம்பி பாகு காய்ச்சவும். காய்ச்சிய பாகை மாவில் சிறிது சிறிதாக கலந்து, சூடாக இருக்கும்போதே எழுமிச்சம் பழ அளவு உருண்டைகளாக பிடிக்கவும்.