பொருள் விளங்கா உருண்டை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 2 கப்

சம்பா கோதுமை - 1 கப்

கடலைப்பருப்பு - 1 கப்

சிறுபருப்பு - 1 கப்

உருண்டை வெல்லம் - 1 கிலோ

தேங்காய் - 1

வேர்க்கடலை - 1 கப்

ஏலப்பொடி - 1 தேக்கரண்டி

சுக்குப்பொடி - 2 தேக்கரண்டி

செய்முறை:

அரிசி, பயறு வகைகளை மிதமான தீயில் வாசனை வரும் வரை தனித் தனியாக வறுக்கவும்.

வேர்க்கடலையைத் தவிர மற்றவற்றை ஆற விட்டு மாவு மிஷினில் கொடுத்து நைசாக மாவாக்கவும்

தேங்காய சிறு பற்களாக நறுக்கவும்.

வெல்லத்தை நீரில் கரைய விட்டு வடிகட்டி ஏலம், சுக்குப்பொடி சேர்க்கவும்.

வெல்லம் கெட்டியான பாகுப்பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு நறுக்கிய தேங்காய், தோலுரித்த வேர்க்கடலை சேர்த்து மாவை கொஞ்சம், கொஞ்சமாக சேர்த்துக் கிளறவும்.

சூடு ஆறும் முன் சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்

குறிப்புகள்: