பைன் ஆப்பிள் அல்வா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அன்னாசிப்பழம் - 1

பால் - 200 மில்லி லிட்டர்

சர்க்கரை - 1 1/2 கப்

திராட்சை - 8

ஏலப்பொடி - சிறிது

நெய் - 200 மில்லி லிட்டர்

கேசரிப்பவுடர் - 1/4 தேக்கரண்டி

உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

அன்னாசியைத் தோல் சீவி, சிறு சிறு துண்டுகளாய் நறுக்கி ஒரு டம்ளர் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும்.

பிறகு அவற்றை ஒரு இட்லி பானையில் வைத்து சிறிது நேரம் ஆவியில் வேகவைக்கவும்.

பழம் வெந்தபின், அவற்றை சிறிது நேரம் ஆறவைத்து, பின் சிறிது பால் சேர்த்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு 100 மி.லி. தண்ணீர் சேர்த்து கம்பிப் பாகாக காய்த்துக் கொள்ளவும்.

பாகு கெட்டியாய் வந்தவுடன் அதில் அரைத்து வைத்துள்ள அன்னாசி விழுதினைப் போட்டு, ஏலப்பொடி, ஒரு சிட்டிகை உப்பு, கேசரிப்பவுடர், வறுத்த திராட்சை சேர்த்து நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி நன்கு கிளறவும்.

அடி ஒட்டாமல் அல்வா பதம் வரும் வரை கிளறி பின் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: