பைனாப்பிள் கேசரி (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ரவை - 1 கப்

பொடியாக நறுக்கிய பைனாப்பிள் - 1/2 கப்

சக்கரை - 1/2 கப்

பால் - 2 கப்

பைனாப்பிள் கலர் - சிறிதளவு

நெய் - 2 மேசைக்கரண்டி

செய்முறை:

முதலில் 1 தேக்கரண்டி நெய் ஊற்றி பைனாப்பிளை 2 நிமிடம் வதக்கி எடுத்து தனியாக வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் பாலினை காய்ச்சவும்.

பின்னர் கடாயில் 1 தேக்கரண்டி நெய் ஊற்றி ரவையினை வறுக்கவும்.

அதன் பின் அதில் பாலினை ஊற்றி கட்டி இல்லாமல் நன்றாக கிளறி வேகவிடவும். (இடைஇடையே நெய்யினை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும்).

ரவை முக்கால் பாகம் நன்றாக வெந்த பிறகு சர்க்கரை மற்றும் வதக்கி வைத்துள்ள பைனாப்பிள்ளை சேர்த்து 2 - 3 நிமிடம் நன்றாக கிளறி விடவும்.

கடைசியில் நீங்கள் விரும்பினால் வறுத்த முந்திரி சேர்க்கவும்.

குறிப்புகள்: