பைனாப்பிள் கேசரி
தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
சர்க்கரை - 1 கப்
சதுரமாக நறுக்கிய பைனாப்பிள் - 3/4 கப்
பைனாப்பிள் எசன்ஸ் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் நிற கேசரி பவுடர் - 2 சிட்டிகை
முந்திரி - 7 அல்லது 8
திராட்சை - 7 அல்லது 8
நெய் - தேவையான அளவு
செய்முறை:
பைனாப்பிள் துண்டுகளுடன் சர்க்கரையை கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
ரவையை மிதமான சூட்டில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் சிறிது நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்து வைக்கவும்.
அதே கடாயில் ஒரு கப் ரவைக்கு 2 1/2 கப் தண்ணீர் ஊற்றி கேசரி பவுடர் சேர்த்து கொதிக்கவிடவும்.
தண்ணீர் கொதித்ததும் ரவையை மெதுவாகச் சேர்த்துக் கிளறவும்.
ரவை சேர்த்த பின்பு கொதி வந்ததும் ஊற வைத்த பைனாப்பிள், சர்க்கரை கலவையைச் சேர்த்துக் கிளறவும். தளதளவென்று கொதித்து வரும் போது மூடிபோட்டு சிம்மில் வைத்து வேகவிடவும்.
கெட்டியான பதத்திற்கு வந்ததும் எசன்ஸ், முந்திரி, திராட்சை மற்றும் நெய் சேர்த்து இறக்கி பரிமாறவும்.