பேக்ட் ஸ்வீட் பொட்டேடோ
தேவையான பொருட்கள்:
சக்கரவள்ளி கிழங்கு - இரண்டு (மீடியமாக)
சீனி - 1/4 கப்
முட்டை - 1
பட்டர் - 50 கிராம்
வெனிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி
உப்பு - 2 சிட்டிகை
செய்முறை:
கிழங்கை வேக வைத்து தோலுரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பட்டரும், முட்டையும் குளிர்ந்த நிலையில் இல்லாமல் இருக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் கிழங்கை போட்டு குறைந்த வேகத்தில் இரண்டு நிமிடங்கள் பீட்டரால் அடிக்கவும்.
கிழங்கு கட்டியில்லாமல் மசிந்ததும், உப்பு, சீனி மற்றும் முட்டை சேர்த்து ஒன்று சேர அடிக்கவும்.
பிறகு பட்டர், வெனிலா எசன்ஸ் சேர்த்து மூன்று நிமிடம் நன்றாக அடிக்கவும்.
நன்கு மென்மையான கலவையானதும், பேக் செய்ய ஆயத்தமாக அவனை 180 டிகிரி செல்சியசில் முற்சூடு செய்யவும்.
ஒரு 24 செ.மீ அளவில் உள்ள பேக்கிங் ட்ரேயை எடுத்துக் கொண்டு பட்டரை நன்கு பரவலாக தடவிக் கொள்ளவும்.
அதில் கலவையை பரவலாக வைத்து முற்சூடு செய்த அவனில் 25 நிமிடம் வைத்து பேக் செய்யவும். பேக் ஆனதும் மேலே பொன்னிறமாக இருக்கும். இல்லையென்றால் இன்னும் ஐந்து நிமிடம் வைத்துக் கொள்ளலாம்.
பேக் ஆனதும் வெளியில் எடுத்து அப்படியே ஒரு மணி நேரம் வைத்திருக்கவும்.
ஒரு மணி நேரம் கழித்து துண்டுகள் போட்டு பரிமாறவும்.
குறிப்புகள்:
இதே அளவிலான ட்ரே இல்லையென்றால் சிறிய ட்ரேயிலேயே செய்யலாம். கலவையை சரி பாதியாக பிரித்து இரண்டு தடவை பேக் செய்யலாம். தடிமனாக இருந்தால் நன்றாக இருக்காது.
விரும்பினால் முந்திரி, பாதாமை பொடியாக நறுக்கி சேர்க்கலாம்.