பூர்ண கொழுக்கட்டை

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

வெல்லம் - 1/4 கிலோ

பச்சரிசி மாவு - 1/4 கிலோ

கடலைபருப்பு - ஒரு டம்ளர்

உப்பு - தேவையான அளவு

தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி

செய்முறை:

வாணலியில் வெல்லத்தை போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும்.

கடலை பருப்பை 15 நிமிடம் ஊற விட்டு ஒன்றிரண்டாக மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். அதை பாகுடன் சேர்த்து உப்பு சேர்த்து கிளறவும்.

பாகுடன் நன்றாக மிக்ஸ் ஆனதும் அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து கிளறவும்.

நன்றாக தண்ணீர் இல்லாமல் வாணலியில் ஒட்டாமல் வரும். அப்போது தனியே எடுத்து ஆற வைக்கவும்.

பச்சரிசி மாவுடன் கொஞ்சம் உப்பு சேர்த்து கொதித்த தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து கரண்டியின் காம்பால் கிளறி பின் பொறுக்கும் சூட்டில் கையால் பிசைந்து வைக்கவும்.

மாவை கையில் வைத்து விருப்பத்திற்கு ஏற்ப தட்டி அதன் உள்ளே பூரணம் சேர்த்து மூடி வைக்கவும். அதனை இட்லி பாத்திரத்தில் ஐந்து நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

குறிப்புகள்:

மாவு பிசைய தண்ணீர் ரொம்பவும் சூடாக இருக்க கூடாது குறைவான சூடாகவும் இருக்க கூடாது, நடுத்தர சூடாக இருந்தால் தான் கொழுக்கட்டை வேகும் போது உடையாமல் வரும். கையில் தட்டும் போது கொஞ்சம் எண்ணெய் சேர்த்து தட்டவும். கையில் ஒட்டாமல் வரும்.