பூரண் போளி
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1/4 கிலோ
கடலைப்பருப்பு - 200 கிராம்
வெல்லம் - 200 கிராம்
ஏலக்காய் - 2
நெய் - ஒரு கிண்ணம்.
செய்முறை:
கோதுமை மாவ நன்கு சலித்து சப்பாத்தி மா பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
கடலைப்பருப்பை, குக்கரில் நன்கு குழைய வேக விடவும்.
வெந்த பருப்பை தண்ணிர்பூராவும் நன்கு வடியவிட்டு ஆற விடவும்.
பருப்பு வெல்லம் ஏலக்காய் எல்லாவற்றையும் மிக்சியில் நைசாக அரைக்கவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அரைத்த கலவையைஊற்றி கை விடாமல் கிளறவும்.
நன்கு கெட்டி ஆனதும் இறக்கி ஆற விடவும்.
ஆறியதும் நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டவும்.
பிசைந்து வைத்திருக்கும் கோதுமைமாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி நடுவில் பூரணத்தைவைத்து குழவியால் அழுத்தாமல் வட்டமாக தேய்க்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி போளியைப்போடவும்.
ஒருபுறம் சிவந்ததும், மறுபுரம் திருப்பி, மீண்டும் ஒரு ஸ்பூன் நெய்விடவும்.
இருபுறமும் சிவந்து நன்கு வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.