பூந்தி லட்டு (1)
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 1 கிலோ
சீனி - 1 கிலோ
முந்திரி - 100 கிராம்
உலர்ந்த திராட்சை - 100 கிராம்
ஏலக்காய் பொடி - 2 தேக்கரண்டி
ஜாதிக்காய் பொடி - 1 தேக்கரண்டி
நெய் - 250 கிராம்
மஞ்சள் - சிறிதளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை:
நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து வைக்கவும்.
கடலைமாவை தண்ணீர் விட்டு இட்லி பதத்திற்கு கரைக்க வேண்டும்.
இரண்டு கரண்டி தேவை. ஒன்று கண்ணுள்ளது மற்றையது கலவை எடுப்பதற்குரியது.
அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் கடலைமாக் கலவையை ஒரு கரண்டியில் எடுத்து கண் உள்ள கரண்டியில் தேய்த்து எண்ணெயில் விழ வேண்டும்.
பூந்தி லேசான மஞ்சளாக வர முறுகவிடாமல் அளவான பதம் வர எடுக்கவும்.
அப்படியே முழுவதையும் பொரித்து எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர்விட்டு சீனியை கொட்டி சீனிப்பாகு காய்ச்ச வேண்டும்.
சீனிப்பாகில் சிறிதளவு மஞ்சள் சேர்க்கவும்.
சீனிப்பாகு அளவான பதம் வந்த பின்பு அடுப்பை குறைத்து விட்டு பொரித்து வைத்துள்ள பூந்தியைப் போடவும்.
வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய் என்பவற்றை பாகுக்குள் போட்டு நன்றாக கலக்கி இறக்கவும்.
பின்பு வேறு ஒரு பாத்திரத்தில் போட்டு கேக் அடிக்கும் பீட்டரால் (beater) ஒரு முறை அடிக்கவும்.
பின்பு கையில் நெய் தடவி அளவான லட்டுகளாக (உருண்டைகளாக) பிடித்து வைத்து பரிமாறவும். .