பூசணிக்காய் அல்வா (2)
தேவையான பொருட்கள்:
முற்றிய பூசணிக்காய் - 1
சர்க்கரை - 1 1/2 கிலோ
நெய் - சிறிதளவு
திராட்சை - 8
முந்திரி - 10
ஏலப்பொடி - சிறிது
ஜாதிக்காய் பொடி - சிறிது
கேசரிப்பவுடர் - ஒரு சிட்டிகை
செய்முறை:
பூசணிக்காயை தேங்காய்த் துருவி அல்லது மரக்கட்டை சீப்பால் துருவி எடுத்துக் கொள்ளவும்.
துருவிய பூசணிக்காயை நான்கு டம்ளர் தண்ணீரில் வேகவைத்து எடுத்து ஒரு வெள்ளை துணியில் வடிகட்டி பிழிந்தெடுக்க வேண்டும்.
இரண்டு கிலோ பூசணி இப்போது ஒன்றரை கிலோவாக குறைந்திருக்கும்.
இதனுடன் ஒன்றரை கிலோ சர்க்கரை சேர்த்து அடுப்பில் ஏற்றி வேகவைக்க வேண்டும்.
சர்க்கரை பாகாக உருகி, மொத்தமாக இறுகி வரும் வேளையில் வாணலியில் நெய் விட்டு முந்திரி, திராட்சை, பாதாம் வறுத்து அல்வாவில் போட்டுக் கிளறவும்.
இறக்குவதற்கு முன்பு, ஏலப்பொடி, ஜாதிக்காய் பொடி போட்டு கடைசியாக கேசரிப்பவுடர் சேர்த்துக் கிளறிவிடவும்.