பீட்ரூட் ஹல்வா (1)
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - 1 கிலோ
சர்க்கரை - 400 கிராம்
மில்க் மெயிட் - 200 கிராம்
பால் - 200 மில்லி
ஏலக்காய் – 3
கிஸ்மிஸ் பழம் – கருப்பு (அல்லது) மஞ்சள்
பாதாம் - 50 கிராம் (பொடிக்க) + 25 கிராம்
முந்திரி - 50 கிராம்
பிஸ்தா - 25 கிராம்
அக்ரூட் - 25 கிராம்
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
பாலை காய்ச்சி வைத்துக் கொள்ளவும். மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பீட்ரூட்டை தோல் சீவி விட்டு துருவிக் கொள்ளவும். 50 கிராம் பாதாமை பொடித்து கொள்ளவும். 25 கிராம் பாதாம், முந்திரி, அக்ரூட் மூன்றையும் பொடியாக நறுக்கி அதனுடன் கிஸ்மிஸ் பழத்தையும் சேர்த்து நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
வாயகன்ற பாத்திரத்தில் பட்டர் போட்டு உருகியதும் துருவிய பீட்ரூட்டை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
வதக்கிய பீட்ரூட்டுடன் காய்ச்சிய பாலை ஊற்றி ஏலக்காய் சேர்த்து வேக விடவும்.
பீட்ரூட் முக்கால் பாகம் வெந்ததும் பொடித்து வைத்திருக்கும் பாதாம் பவுடரை சேர்த்து கிளறவும்.
பாதாம் பவுடர் சேர்த்த பின்னர் சிறிது நேரம் மூடி வைத்து வேக விடவும்.
சிறிது நேரம் கழித்து மூடியை திறந்து ஒரு முறை நன்கு கிளறி, பின்னர் சர்க்கரையை சேர்க்கவும்.
சர்க்கரை சேர்த்த பின்னர் கலவை தண்ணீர் போல் இளகி விடும் அப்போது கிளறி விட்டு தண்ணீரை வற்ற விடவும். பின்னர் அதில் இரண்டு மேசைக்கரண்டி நெய்யை சேர்த்து கிளறவும்.
இறுதியாக மில்க் மெயிட்டை ஊற்றி நன்கு கைவிடாமல் கிளறவும். மில்க் மெயிட் சேர்த்த பின்னர் அப்படியே விட்டால் அடி பிடித்துவிடும்.
கலவை ஒன்றாக சேர்ந்து சற்று கெட்டியானதும் வறுத்து வைத்துள்ள பருப்பு வகைகளை சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
நட்ஸ் வகைகள் விருப்பத்திற்கு ஏற்றாற் போல், வெறும் பாதாம், முந்திரி கூட சேர்க்கலாம்.