பிஸ்தா ஸ்வீட்
1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
பிஸ்தா - 100 கிராம்
பாதம் - 100 கிராம்
முந்திரி - 100 கிராம்
பால் - 1 லிட்டர்
சீனி - 300 கிராம்
நெய் - 100 கிராம்
செய்முறை:
பாதம், பிஸ்தா இரண்டையும் தோல் எடுத்து மிக்ஸியில் நன்கு அரைத்துக்கொள்ளவும்.
அதேபோல் முந்திரியையும் அரைத்துக்கொள்ளவும்
பாலை வற்றக்காய்ச்சவும். இவைகளை பாலுடன் சேர்த்து கிளறவும். நன்கு வற்றி வரும் போது சீனியைப்போடவும்
பால் நன்றாக வற்றும் போது நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி கிளறவும்.பிறகு சிறிது ஸ்வீட்டை கையில் எடுத்து உருட்டி பார்க்கவும் உருட்டும் பதம் வந்தால் இறக்கவும்.
ஸ்வீட் பாக்ஸில் ஊற்றி மேலே சில்வர் லீவ்ஸைக்கொண்டு அலங்கரிக்கவும்