பிஸ்தா பர்பி 1
0
தேவையான பொருட்கள்:
பிஸ்தா - 3 1/2 கப்
சீனி - 8 கப்
ஏலக்காய் - 8
குங்குமப்பூ - 10
நெய் - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
பிஸ்தாப்பருப்பை சுத்தம் செய்து நன்கு வெண்ணெய் போல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
சீனியை கெட்டியான பாகாக காய்ச்சி அதில் அரைத்து வைத்துள்ள பிஸ்தா விழுதைப் போட்டுக் கிளறவும்.
நன்கு முறுகி வரும்போது இறக்கி ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி பரப்பிக் கொள்ளவும்.
அதன்மீது பொடித்த ஏலகாயையும், குங்குமப்பூவையும் பரவலாகத் தூவி, துண்டுகள் போட்டு பரிமாறவும்.