பிஸ்கட் பாயசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பால் - 3/4 லிட்டர்

சீனி - 1/4 கிலோ (சுவைக்கேற்ப)

மில்க் பிகிஸ் பிஸ்கட் - ஒரு பாக்கெட்

பிரிட்டானியா பிஸ்கட் - 100 கிராம்

ஏலக்காய்தூள் - ஒரு தேக்கரண்டி

முந்திரிபருப்பு - 12

பாதாம்பருப்பு - 7

பச்சரிசி - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

முதலில் முந்திரிபருப்பு, பாதாம்பருப்பு, பச்சரிசி மூன்றையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும்.

பாலை வாயகன்ற பாத்திரத்தில் ஊற்றி நன்கு காய்ச்சவும்.

காய்ச்சிய பாலில் அரைத்த முந்திரி, பாதாம், பச்சரிசி விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.

அதில் சீனியை சேர்த்து கரையும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.

பின் ஏலக்காய்தூள், மில்க் பிகிஸை ஒன்றிரண்டாக உடைத்து சேர்க்கவும். ஊறிய உடன் கரண்டியால் மசித்து விடவும்.

கடைசியாக பிரிட்டானியா பிஸ்கட்டை சேர்த்து பரிமாறவும்.

குறிப்புகள்:

சூடாகவும் பருகலாம், சாப்பிடும் போது ஒரு தேக்கரண்டி நெய் விட்டு சாப்பிட்டால் சுவை கூடும். இதை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் இன்னும் அருமையாக இருக்கும்.