பிரெட் போளி
1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
பிரெட் - 1 பாக்கெட்
வெல்லம் - 1/4 கிலோ
தேங்காய் - 1 மூடி
மைதா மாவு - 1/4 கிலோ
ஏலக்காய்த்தூள் - 1 தேக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
பூரணம்:
பிரெட்டைப் பூப் போன்று துருவலாக மிக்ஸியில் அரைத்தும் கொள்ளவும்.
தேங்காயைத்துருவிக் கொள்ளவும்.
சர்க்கரையை பாகு காய்ச்சவும்.
கம்பிப்பாகு வந்ததும் தேங்காய் துருவல், பிரெட் துருவல் போட்டு நெய் ஊற்றிக் கிளறவும்.
ஒட்டாமல் சுருள வந்ததும் ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி வைக்கவும்.
மைதா மாவைப் பிசைந்து 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
போளிக்கு இடுவது போல் இட்டு பிரெட் பூரணத்தை வைத்து தட்டி தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும்.