பிராமணர்களின் பால் பாயசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

குழைவாக வடித்த சாதம் - ஒரு பெரிய கரண்டி

சர்க்கரை - ஒன்றரை பெரிய கரண்டி

பால் - 3/4 லிட்டர்

குங்மப்பூ - 1/4 தேக்கரண்டி

ஏலக்காய் - 3

நெய் - 3 தேக்கரண்டி

முந்திரி - 10

கிஸ்மிஸ் பழம் - 10 (பிளாக் கலர்)

செய்முறை:

ஒரு கரண்டி குழைவாக வடித்த சாதம் சூடாக இருக்கும் போதே மசித்து நசுக்கி வைத்து கொள்ளவும்.

சர்க்கரை ஒரு கரண்டிக்கு ஒன்றரை கரண்டி சாதம் கரண்டி அளவே.

நெய்யில் முந்திரி, கிஸ்மிஸ் பழம் வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

முதலில் பாலில் சர்க்கரை, குங்மப்பூ, ஏலக்காய் போட்டு நல்ல கலக்கிக் கொண்டு கொதிக்கவிட்டு, கொதி வந்ததும் மசித்து வைத்த சாதத்தை அதில் போட்டு நல்ல கட்டி தட்டாமல் கிளறவும்.

கடைசியில் வறுத்து வைத்துள்ள நெய்யில் முந்திரி, கிஸ்மிஸ் பழத்தை கொட்டி பரிமாறவும்.

குறிப்புகள்: