பிரட் ஜாமூன்
0
தேவையான பொருட்கள்:
பிரட் - 1 பாக்கெட்
சீனி - 200 கிராம்
பட்டர் அல்லது நெய் - 100 கிராம்
தண்ணீர் - 1/2 கப்
ஏலக்காய் அல்லது ஏதாவது எசன்ஸ் - 3
செய்முறை:
பிரட்டின் ஓரங்களை வெட்டிவிட்டு விருப்பமான வடிவத்தில் வெட்டிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சீனியை போட்டு 1/2 கப் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும்.
3. பாகு கொதித்தவுடன் ஏலக்காய் தட்டி போட்டு, பாகு பிசுக்கு பதம் வந்தவுடன், அடுப்பை அணைத்து விடவும்.
ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் 2 ஸ்பூன் பட்டர் (அல்லது) நெய் ஊற்றி வெட்டிய பிரட் துண்டுகளை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமானவுடன் எடுத்து விடவும்.
இப்போது பொரித்த பிரட் துண்டுகளை காய்சிய பாகில் போட்டவுடன் எடுத்து விடவும்.பாகு சூடாக இருப்பதால் அதிகம் ஊறினால் நன்றாக இருக்காது.
இப்போது சுவையான பிரட் ஜாமூன் ரெடி.