பா கொழுக்கட்டை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி அல்லது இட்லி அரிசி - 2 டம்ளர்

தேங்காய் துருவல் - 1 டம்ளர்

வெல்லம் துருவியது - 1 1/2 டம்ளர்

ஏலப்பொடி - 1 தேக்கரண்டி

நெய் - 3 தேக்கரண்டி

தேன் குழல் அச்சுவுடன் முறுக்கு பிழியும் குழல்

உப்பு - 1/2 தேக்கரண்டி

செய்முறை:

புழுங்கல் அரிசியை ஊரவைத்து நைசாக கட்டியாக அரைக்கவும். ஈரப்பதம் குறைய காட்டன் துணியில் மாவை போட்டு சுற்றி வைத்து எடுக்கவும்

அடி கனமான பாத்திரத்தில் 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைக்கவும். மாவை லேசான உப்பு போட்டு பிசைந்து முறுக்கு குழலில் போட்டு கொதிக்கும் தண்ணீரில் பிழியவும். வெந்ததும் தண்ணீரில் மிதக்கும் தேன் குழல்களை எடுத்து ஆற வைக்கவும்.

எல்லா மாவினையும் பிழிந்து எடுக்கவும். ஆறியதும் குழல்களை உதிர்த்து வைக்கவும்.பாத்திரத்தில் மீதியுள்ள தண்ணீரில் தேங்காய் துருவல், ஏலப்பொடி,வெல்லம் சேர்த்து கிளரவும். பின் அத்துடன் உதிர்த்த குழல்களை போட்டு நெய் சேர்த்து கிளறி இறக்கவும்

குறிப்புகள்: