பால் பர்பி
தேவையான பொருட்கள்:
பால் - 1/2 லிட்டர்
கோதுமை மாவு - 50 கிராம்
சர்க்கரை - 50 கிராம்
சில்வர் பாயில் (silver foil) - 5
நெய் - 10 கிராம்
செய்முறை:
அடுப்பில் சுத்தமான வாணலியில் சிறிது நெய் விட்டு அது சூடானதும் கோதுமை மாவைப் போட்டு சிவக்க வறுத்துக்கொள்ளவும்.
அதை ஒரு தாம்பாளத்தில் கொட்டிப் பரப்பி வைத்துக்கொள்ளவும்.
வாணலி அல்லது அடிபாகம் கனமாகவுள்ள வாயகன்ற பாத்திரத்தைச் சுத்தம் செய்து கொள்ளவும்.
பால்,சர்க்கரை, வறுத்த மாவு மூன்றையும் போட்டு நன்றாக கலந்து நெய்யில் பெரும் பகுதியை விட்டு தேவையானால் நூறு மில்லி தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து விடாமல் கிளறி கொண்டே இருக்கவும்.
பர்பி பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும் இறக்கிவிடவும்.
ஒரு தட்டைச் சுத்தம் செய்து அதில் நெய் தடவி கிளறிய பர்பியை கொட்டி சமமாகப் பரப்புங்கள்.
சூடாறியதும் சதுரத்துண்டுகளாக நறுக்கி எடுத்து அதன் மேல் பாகத்தில் மாத்திரம் வெள்ளிக் காகிதம் வைத்து லேசாக தடவுங்கள்.