பால் பணியாரம் (7)

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 200 கிராம்

உளுத்தம் பருப்பு - 100 கிராம்

எண்ணெய் - 250 கிராம்

முற்றிய தேங்காய் - 1

அச்சு வெல்லம் - 100 கிராம்

ஏலக்காய் - 4

உப்பு - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

அரிசி, உளுந்து ஆகியவற்றை தனித்தனியாக ஒரு மணிநேரம் ஊறவைத்து உருட்டும் பதத்தில் அரைத்து கலந்து கொள்ளவும்.

பிறகு தேங்காயை துருவி கெட்டியாக பால் எடுத்து வெல்லம், உப்பு, ஏலக்காய்தூள் சேர்த்து வெல்லம் கரையும் வரை அடுப்பில் வைத்து இறக்கி ஆற விடவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் அரைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி போட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுத்துக் கொள்ளவும்.

பிறகு ஆறிய தேங்காய் பாலை அகலமான பாத்திரத்தில் ஊற்றி அதில் வெந்த உருண்டைகளை போட்டு கலந்து விட்டு ஊறியவுடன் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: