பால் கொழுக்கட்டை (சிலோன் ஸ்வீட்)
3 - Ok!
2 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
அரிசிமா - 50 கிராம்
சீனி - 75 கிராம்
தோல் நீக்கி உடைத்தப்பயறு - 75 கிராம்
பொடி செய்த ஏலம், கிராம்பு - 2 தேக்கரண்டி
வனிலா - 1 தேக்கரண்டி
குங்குமப்பூ - சிறிது
செய்முறை:
அரிசி மாவை 1/2 கப் கொதிநீர் விட்டு நன்றாகப் பிசைந்து மிக மிகச்சிறிய உருண்டைகளாக உருட்டி நீராவியில் அவித்து எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் பயறைப் போட்டு சிறிது நீர் விட்டு அவிக்கவும்.
பயறு வெந்ததும் அதில் பால், சீனி, பிளம்ஸ், ஏலம் கிராம்பு பொடி, வனிலா யாவற்றையும் போட்டு நன்றாக கிளறிவிடவும்.
பால் நன்றாகக் காய்ந்ததும் அடுப்பை நிறுத்தி விட்டு, அவித்து வைத்த உருண்டைகளைப் போட்டு கிளறி ஆற விட்டுப் பரிமாறலாம்.
குறிப்புகள்:
மாலை டிபனுக்கு மிக நன்றாக இருக்கும்.