பால் கேசரி
0
தேவையான பொருட்கள்:
ரவை - 1/2 கிலோ
சர்க்கரை -1/2 கிலோ
பால்- 1 லிட்டர்
கேசரி பவுடர் - 1/2 தேக்கரண்டி
ஏலக்காய் - 5
முந்திரி - 25
,நெய் -1/4 கிலோ
.
செய்முறை:
1 ஸ்பூன் நெய்யில் முந்திரியை ஒடித்து, வறுத்து எடுக்கவும்.ரவையை 1 ஸ்பூன் நெய் விட்டு, வறுத்து எடுக்கவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் பால் விட்டு,நன்கு கொதிக்கும் போது கேசரி பவுடர் போட்டு , ரவையை தூவி கட்டியில்லாமல் கிளறவும்.
ரவை வெந்ததும், சர்க்கரையை சிறுது சிறிதாக சேர்த்து, கட்டியின்றி கிளறவும்.
கேசரி கெட்டியாக வரும் போது, நெய், தூளாக்கிய ஏலக்காய், முந்திரி எல்லாம் போட்டு, கிளறி இறக்கி பரிமாறவும்.