பால் அல்வா (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பால் - 4 கப்

ரவை - 1/2 கப்

சர்க்கரை - 2 கப்

நெய் - 1 1/2 கப்

மஞ்சள் கலர் - 1/2 தேக்கரண்டி

முந்திரிப்பருப்பு - 10

பாதாம்பருப்பு - 5

செய்முறை:

வாணலியில் சிறிதளவு நெய்விட்டு முந்திரி, பாதாம் பருப்புகளைப் போட்டு வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

அதே வாணலியில் மீதம் இருக்கும் அனைத்துப் பொருட்களையும் சேர்த்துக் கொள்ளவும்.

அதிக அனலில் வைத்துக் கிளற வேண்டும். அனைத்தும் சேர்ந்து வரும்போது அனலை குறைத்து கைவிடாமல் கிளற வேண்டும்.

அல்வாவிலுருந்து நெய் வெளிவரும் போது அடுப்பில் இருந்து இறக்கி முந்திரி, பாதாம் தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: