பால் அடைப் பாயாசம்
தேவையான பொருட்கள்:
ரெடிமேட் அடை - 100 கிராம்
பால் - முக்கால் லிட்டர்
மில்க் மெய்ட் டின் சிறியது - சுமார் 150 கிராம் அல்லது 200 கிராம் சீனி
ஏலக்காய்த்தூள் - 2 பின்ச்
சாஃப்ரான் - 1 பின்ச்
நெய் - 1 மேசைக்கரண்டி
முந்திரி - 10
உலர் திராட்சை -10
உப்பு - பின்ச் (விரும்பினால்)
செய்முறை:
ரெடிமேட் அடையை முதலில் கொதிக்கும் நீரில் போட்டு வேக வைக்கவும்.அடை பெரிய துண்டுகளாக இருந்தால் கையால் சிறிது நொறுக்கி கொள்ளவும்.
பாலைக் காய்ச்சவும்.காய்ச்சிய பாலில் வேக வைத்த அடையை எடுத்து சேர்க்கவும்.ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.சாஃப்ரான் சேர்க்கவும்.கொதி வரட்டும்.சிம்மில் வைத்தால் சிறிது பால் வற்றி ஆடை பிடிக்கும்.
பின்பு அத்துடன் மில்க் மெய்ட் சேர்க்கவும்.அடுப்பை சிம்மில் வைக்கவும்.
தாளிப்பு கரண்டியில் நெய் விட்டு முந்திரி திராட்சை வறுத்து அடைப் பாயாசத்தில் சேர்த்து பரிமாறவு.