பாலக்காடு ஐயர் பால் பாயசம்
0
தேவையான பொருட்கள்:
பால் - 1 லிட்டர்
பச்சரிசி - 1 கைப்பிடி
சர்க்கரை - 1 கப் (அவரவர் விருப்பத்திற்கேற்ப கூட்டி குறைத்துக்கொள்ளலாம்)
செய்முறை:
முதல் முறை - அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும்.
பால் காய்ந்ததும் அரிசியைக் கழுவி பாலுடன் சேர்க்கவும்.
அடி பிடிக்காமல் இருக்க அவ்வப்போது கிளறவும்.
அரிசி குழைய வெந்ததும் இறக்கி வைத்து பிறகு சர்க்கரையை சேர்த்து கலக்கி பரிமாறவும்.
இரண்டாம் முறை பாலைக் காய்ச்சவும்.
கழுவிய பச்சரிசியைச் சேர்க்கவும். குக்கரில் வைத்து குழைய வேக வைத்து எடுக்கவும்.
குக்கரிலிருந்து இறக்கி சர்க்கரையைச் சேர்த்துக் கிளறி சர்க்கரை கரைந்ததும் மூடி வைத்துப் பரிமாறவும்.