பாம்பே அல்வா
தேவையான பொருட்கள்:
கார்ன் ஃப்ளார் மாவு - 50 கிராம்
சர்க்கரை - 200 கிராம்
நெய் - 100 கிராம்
முந்திரி - தேவையான அளவு
ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
விரும்பிய ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை
நீர் - 125 மில்லி
செய்முறை:
சர்க்கரையில் நீர் விட்டு அடுப்பில் வைத்து கரைந்ததும் அதில் எலுமிச்சை சாறு விட்டு வைக்கவும்.
கார்ன் ஃப்ளார் மாவில் சிறிது நீர் விட்டு கட்டி ஆகாமல் கரைத்து வைக்கவும்.
பாத்திரத்தில் நெய் விட்டு கார்ன் ஃப்ளார் மாவை ஊற்றி கலந்து விடவும். பின் அடுப்பில் வைத்து சிறுதீயில் கலக்கவும்.
சிறிது கட்டியாக ஆரம்பிக்கும் போது அடுப்பில் இருந்து எடுத்து விடவும்.
இதில் சர்க்கரை நீரை சிறிது சிறிதாக சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
முழுவதும் கலந்ததும் அடுப்பில் வைத்து சிறிது சிறிதாக நெய் சேர்த்து கொண்டே கிளறவும்.
இத்துடன் கலர், ஏலக்காய் தூள் சேர்த்து நெய் வெளியே வரும் வரை கலந்து கொண்டே இருக்கவும். கடைசியாக பொடியாக உடைத்த முந்திரி சேர்த்து இறக்கவும்.
நெய் தடவிய தட்டில் கொட்டி சிறிது நேரம் விட்டு பின் துண்டுகளாக வெட்டி எடுக்கவும்.
குறிப்புகள்:
இதே அல்வாவை சுலபமாக செய்ய விரும்பினால் முதலிலேயே மாவுடன் சர்க்கரை நீரை கலந்து அடுப்பில் வைத்து கிளறலாம். ஆனால் அது போல் செய்யும் போது இந்த முறையில் கிடைக்கும் கண்ணாடி போன்ற தன்மை குறைவாக இருக்கும். சுவை மாறுபடாது.