பாதுஷா (1)
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 2 கப்
சர்க்கரை - 2 கப்
தயிர் - 1 கப்
பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
பேக்கிங் சோடா - 1 தேக்கரண்டி
நெய் - 1/2 கப்
தண்ணீர் - பாகிற்கு தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க
செய்முறை:
முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்..
மைதா மாவுடன் பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடாவை சேர்த்து நன்றாக கலக்கி நெய்யை சேர்த்து பிசைந்து பின் தயிர் சேர்த்து பிசையவும். பிசையும் போது சப்பாத்தி மாவிற்கு பிசைவது போல் அல்லாமல் சற்று லெயர் (படத்தில் இருக்கும் பதம்) போன்று இருப்பது போல் பிசையவும்.
அரை மணி நேரம் அதை இறுகவிட்டு பின் தட்டையாக உருட்டி நடுவே சிறு துளை போல அழுத்தவும்.. உருட்டும் போதும் சர்க்கரை பாகை உறிஞ்சும்படி சொரசொரவென ( ரா எட்ஜ்) இருக்க வேண்டும்.
இதனிடையில் சர்க்கரை பாகை கம்பி பதத்தில் காய்ச்சி ஆற வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி செய்து வைத்திருக்கும் தட்டையான உருண்டையை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
ஆறிய பின் பாகில் போட்டு பிரட்டி எடுத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
அதிக சர்க்கரை விரும்புவோர் பாகிலேயே ஊற வைக்கலாம். இல்லையெனில் நன்றாக பிரட்டி தனியே எடுத்து வைத்து விடவும்.