பாதுஷா

on on on off off 5 - Good!
3 நட்சத்திரங்கள் - 5 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மைதா - 3 கப்

வெண்ணெய் - 1 கப்

சர்க்கரை - 3 கப்

தயிர் - 2 மேசைக்கரண்டி

பேக்கிங் சோடா - 1/2 தேக்கரண்டி

பால் - 2 மேசைக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க

ஏலக்காய் - 4

செய்முறை:

தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

உருக்கிய வெண்ணெய், பேக்கிங் சோடா மற்றும் தயிர் சேர்த்து குழைத்து கொள்ளவும்.

அதனுடன் மைதா சேர்த்து கலக்கவும். பிறகு பால் சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும்.

அரை மணிநேரம் கழித்து மாவை சிறு உருண்டைகளாக எடுத்து தட்டி கொள்ளவும் (அ) படத்தில் உள்ளதுபோல செய்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, மிதமான சூட்டில் வைத்து தட்டி வைத்துள்ள பாதுஷாக்களை பொரித்து எடுக்கவும் (10-15 நிமிடங்கள் வரை).

ஒரு கம்பி பதத்திற்கு சர்க்கரை பாகு காய்ச்சி, அதனுடன் அரை தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் ஏலக்காயை பொடி செய்து சேர்க்கவும். பொரித்து வைத்த பாதுஷாக்களை அதில் போடவும். ஐந்து நிமிடங்கள் வரை ஊற வைத்து ஆற விடவும்.

அதன் மேலே பாதாம் பருப்புகளை தூவி அலங்கரிக்கலாம்.

குறிப்புகள்: